பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்ட முக்கிய குற்றவாளிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 30, 2025

பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்ட முக்கிய குற்றவாளிகள்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பல்களின் தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இந்தோனேசியாவில் இருந்து ஏற்றிவந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (30) பிற்பகல் 3.30 மணியளவில் இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம் இரவு 7.20 மணியளவில் விமான நிலையத்தை அடைந்தது.

இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வைக் கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment