O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின : 237,026 மாணவர்கள் A/L தகுதி : 13,392 மாணவர்கள் 9 ‘A’ சித்திகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 10, 2025

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின : 237,026 மாணவர்கள் A/L தகுதி : 13,392 மாணவர்கள் 9 ‘A’ சித்திகள்

2024 ஆம் ஆண்டு O/L பரீட்சை பெறுபேறுகளின்படி, 237,026 மாணவர்கள் A/L இற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார்.

இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.

இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 சதவீதமாகும்,

இந்தநிலையில், மாகாண ரீதியாக மாணவர்களின் சித்தி சதவீதம் வெளியாகியுள்ளது.
மேல் 74.47%
மத்திய 73.91%
தெற்கு 75.64%
வடக்கு 69.86%
கிழக்கு 74.26%
வடமேல் 71.47%
வட மத்திய 70.24%
ஊவா 73.14
சப்ரகமுவ 73.47%

கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 3,664 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் 474,147 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், 398,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாவர்.

இதற்கிடையில், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அந்தந்தப் பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகள் பட்டியலைப் பதிவிறக்கி, அச்சிடப்பட்ட பிரதியைப் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோல், அனைத்து மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்கள் பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறு பட்டியலைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பார்வையிடவோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இவ்வாறு பெறப்படும் அச்சிடப்பட்ட பெறுபேறுகள் பட்டியல், உயர்தர வகுப்புகளுக்கு சேருவதற்கு செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அச்சிடப்பட்ட பெறுபேறுகள் பட்டியல் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் பட்டியல் அந்த விண்ணப்பதாரர்களுக்கும் மீள் மதிப்பீட்டிற்குப் பின்னர் வழங்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment