இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 26, 2025

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகம்

புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் கடமைகளை பொறுப்பேற்றார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் சசிதேவி ஜலதீபன், திங்கட்கிழமை (25) பதிவாளர் நாயகத் திணைக்களத்தில் புதிய பதிவாளர் நாயகமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் வரலாற்றில் முதல் பெண் பதிவாளர் நாயகம் என்ற பெருமையை சசிதேவி ஜலதீபன் பெறுகின்றார். இது ஒரு வரலாற்று நிகழ்வாகும்

சசிதேவி ஜலதீபன் 2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் சேர்ந்தார்,  இதற்கு முன்பு திருகோணமலை மற்றும் திம்புலாகலில் பிரதேச செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

2003ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்டது முதல் 2023.12.01 முதல் 2006.05.31 வரை திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் உதவிப் பிரதேச செயலாளராவும், 2006.06.01 முதல் 2015.03.17 வரை பிரதேச செயலாளராகவும், 2015.03.18 முதல் 2018.04.04 வரை பொலனறுவை மாவட்டத்தின் திபுலாகல பிரதேச பிரதேச செயலாளராகவும், 2018.04.05 முதல் 2019.12.01 வரை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, இளைஞர் விவகார வடக்கு அபிவிருத்தி அமைச்சினது சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும், 2019.12.02 முதல் 2020.08.14 வரை தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும், 2020.08.15 முதல் 2021.09.30 வரை நிதி மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சினதும் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும், 2021.10.01 முதல் 2024.03.17 வரை கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், 2024.03.18 முதல் 2025.08.22 வரை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் மேலதி செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment