கனவுகளை கட்டியெழுப்புதல், மாற்றத்தை முன்னெடுத்தல் : இலங்கையின் வாகன சந்தையில் BYD யின் வளர்ச்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 28, 2025

கனவுகளை கட்டியெழுப்புதல், மாற்றத்தை முன்னெடுத்தல் : இலங்கையின் வாகன சந்தையில் BYD யின் வளர்ச்சி

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகன (New Energy Vehicle) வர்த்தகநாமமான BYD, இலங்கையில் அறிமுகமான சில மாதங்களிலேயே நாட்டின் வாகனச் சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து, BYD இலங்கை வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் plug-in hybrid மோட்டார் வாகனங்களுக்கான (PHEV) தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த முன்னேற்றம் தொடர்பிலான அறிவிப்பானது இலங்கையின் BYD வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே வெளியிடப்பட்டது.புதிதாக சந்தைக்கு வந்திருந்தாலும், மின்சார வாகனங்கள் மற்றும் plug-in hybrid மோட்டார் வாகனங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் பிரபலமான தேர்வாக BYD வாகனங்கள் மாறியுள்ளது. இது மாற்று சக்தி வாகனங்களுக்கான (NEV) வாடிக்கையாளர்களின் ஊக்கமளிக்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

2025 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில், புதிய வாகன விற்பனையில் BYDயானது இலங்கையில் முன்னிலை வகிக்கின்றது. அந்த வாகன மாதிரிகளில் BYD SEALION 6 வாகனமது அதிகளவிலான வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது BYD-யின் Blade பேட்டரியால் இயக்கப்பட்டு, 1,092 கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் திறனையும் Dipilot என்ற நுண்ணறிவாற்றலுள்ள ஓட்டுநர் உதவி (intelligent driving) அமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரம், மின் சக்தியில் இயங்கும் BYD ATTO 3 மாதிரியானது 480 கிலோமீற்றர் தூரம் வரை செல்லும் திறனையும், 30-50 நிமிடங்களில் விரைவான charging வசதியோடுகூடிய மிருதுவான மற்றும் உடனடியாக பதிலளிக்கும் ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது.

கச்சிதமான மற்றும் குறைந்த விலையில் அதிநவீன BYD DOLPHIN, சக்திவாய்ந்த மற்றும் நேர்த்தியான BYD SEAL, அத்தோடு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாகச அனுபவதுத்துக்காக வடிவமைக்கப்பட்ட, வலுவான மற்றும் சரளை சாலை பகுதிகளுக்கு ஏற்ற plug-in hybrid pickup ஆகிய SHARK 06 மாதிரிகளோடுகூட BYD நிறுவனம் இலங்கை வாடிக்கையாளரிடையே பிரபலமடைந்து வருகிறது. அதேபோல, மாற்று சக்தி வாகனங்களுக்கான (NEV) இலங்கை வாடிக்கையாளர்களிடையே BYD வர்த்தகநாமமானது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சந்தை விரிவாக்கத்துக்கு இணையாக, BYD மற்றும் John Keells CG Auto ஆகியன தமது சேவை வலையமைப்பை விரிவுபடுத்தி வருகின்றன. அதன்படி, அம்பாறை மற்றும் இரத்தினபுரியில் புதிய காட்சியறைகள் மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இவை கொழும்பு, காலி, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள காட்சியறைகளுக்கு இணையாக செயலாற்றும். மேலும், விற்பனைக்குப் பின்னரான சேவை நிலையங்கள் கண்டி, காலி, குருநாகல், இரத்தினபுரி மற்றும் அம்பாறை வரை விரிவுபடுத்தப்பட்டு, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து முக்கிய வாகன சந்தைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதி செய்கின்றன.

இந்த நிகழ்வில் John Keells Holdings PLC குழுமத் தலைவர் க்ரிஷான் பாலேந்திர உரையாற்றுகையில், 'இலங்கையின் NEV துறையில் BYD-யின் ஆரம்ப வெற்றி எங்களது கூட்டு முயற்சியின் வலிமையையும், எதிர்காலத்திற்கான எங்களின் ஒருமித்த தொலைநோக்கையும் எடுத்துக்காட்டுகிறது. DENZA-வின் அறிமுகம் மற்றொரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இலங்கை வாடிக்கையாளர்களுக்கு உயர்தர NEV அனுபவத்தை வழங்குவது நிச்சயம். இலங்கையில் இந்த வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான விரிவாக்கத்தை முன்னெடுக்க John Keells CG Auto-வில் BYD வைத்துள்ள நம்பிக்கைக்கான சான்றாகவும் இது அமைகிறது' என தெரிவித்தார்.

BYD Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர் Liu Xueliang கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை என்பது தெற்காசியாவில் BYD-க்கு ஒரு முக்கிய சந்தையாக விளங்குகிறது. இப்பிராந்தியத்தில் நாங்கள் நுழைந்துள்ள மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் வணிகத்தின் அளவு ஒரே மட்டத்தில் இல்லாவிட்டாலும், இலங்கையின் அளவு தேசிய அளவில் மின்சார வாகனங்களின் நேர்மறையான தாக்கங்களுக்கான உலகளாவிய ஆய்வாக இது இன்னும் செயல்பட முடியும் என்பதை குறிக்கிறது' என தெரிவித்தார்.

இலங்கையில் மாற்று சக்தி வாகனங்களுக்கான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், BYD மற்றும் John Keells CG Auto நிறுவனங்கள் தங்கள் வலையமைப்பை விரிவுபடுத்தி NEV வாகனங்களை அனைத்து மக்களுக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் கவனம் செலுத்துகின்றது. ஆரம்ப நிலை மாதிரிகள் முதல் ஆடம்பரப் பிரிவு வரை பல்வேறு பிரிவுகளில் வாகனங்களை விநியோகிக்கின்றது. புதிய காட்சியறைகள் மற்றும் சேவை நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களும் நீண்டகால வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்கி இலங்கையின் வாகனத் துறையின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைப்பதற்காகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment