இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் பிணையை இரத்து செய்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (16) நிராகரித்தார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் சந்தேக நபரின் பிணையை இரத்து செய்ய போதுமான உண்மைகளை வெளிப்படுத்தாததால், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக நீதவான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment