பொலிஸாரின் அதிரடி பரிசோதனையில் சிக்கிய 11 பஸ்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, May 16, 2025

பொலிஸாரின் அதிரடி பரிசோதனையில் சிக்கிய 11 பஸ்கள்

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இ.போ.சபை (SLTB) மற்றும் தனியார் பஸ்களை பரிசோதிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பஸ்கள், இன்று (15) கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் உள்ள கினிகத்தேனவின் அம்பகமுவ பகுதியில் நீண்ட தூர சேவை பஸ்களின் பரிசோதனை நடைபெற்றது.

இந்த நடவடிக்கையின்போது, பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட 5 இ.போ.சபை பஸ்கள், 6 தனியார் பஸ்கள் உட்பட 11 சாரதிகள் மீது ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பஸ்கள் சாரதிகளுக்கு குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டன.

இந்த பஸ் பரிசோதனையின் போது, பயணிகளை விழிப்புணர்வு செய்யும் வகையில், பஸ் சாரதிகள் போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

No comments:

Post a Comment