மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு : சாரதி உட்பட இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 19, 2025

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு : சாரதி உட்பட இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்று (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.

பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்த போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது.

இதையடுத்து பொலிஸார் குறித்த டிப்பர்வாகனத்தை தமது வாகனத்தில் துரத்திச் சென்ற நிலையில் டிப்பர் வாகனம் வரணி மந்துவில் வீதியால் திரும்பிச் சென்று வேம்பிராய் நோக்கி மிக வேகமாகத் தப்பியோடியது.

இதன் போது டிப்பரில் இருந்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தை நோக்கி டார்ச் லைற் மூலம் பிரகாசமான ஒளியை பாய்ச்சியிருந்தனர்.

இதனால் தமது வாகனத்தை செலுத்த முடியாத நிலையில் பொலிஸார் டிப்பார் வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்

இதையடுத்து குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட 2 சந்தேகநபர்கள் தப்பித்துள்ளதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment