பல்லேகலை பொலிஸார் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின்போது போதையில் பஸ் வண்டியை செலுத்திய சாரதி ஒருவரை நேற்று (14) கைது செய்துள்ளனர்.
கண்டியில் இருந்து மஹியங்கனை, ஹந்துன்கமுவ நோக்கிப் பயணித்த மேற்படி பஸ் வண்டியை பல்லேகலை பிரதேசத்தில் வைத்து தூர இடங்களுக்கான பஸ் வண்டிகளை சோதனை செய்யும் திட்டத்தின் கீழ் பொலிஸார் பொதுவாக சோதனையிட்டுள்ளனர்.
அதன்போதே மேற்படி பஸ் வண்டியின் சாரதி மது அருந்தி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்டையில் உடனடியாகப் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர்.
‘எல்கோலைசர்’ என்ற ஊதும் தொழில்நுட்ப முறையில் சாரதி பரீட்சிக்கப்பட்டபோதே மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
மத்திய பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்க பணிப்பின் பேரில் தூர இடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் மற்றும் சாரதிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். அச்சமயமே இது பற்றி தெரிய வந்துள்ளது.
மேற்படி பஸ் வண்டி உடதும்பறை பஸ் டிப்பேவிற்கு சொந்தமான ஒன்றாகும். சாரதியின் கைதை அடுத்து பயணிகளை வேறு பஸ் வண்டிகளில் அனுப்பவதற்கு பொலிஸார் ஒழுங்கு செய்ததுடன் குறி்ப்பிட்ட இ.போ.ச சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பஸ் வண்டியில் 50 பயணிகள் வரை இருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார் மேற்படி பாதை 18 வளைவுகளைக் கொண்ட பாதையூடாகச் செல்லும் ஒரு பஸ் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment