பதவி விலகினார் சமிந்த விஜயசிறி எம்.பி - News View

About Us

About Us

Breaking

Friday, May 23, 2025

பதவி விலகினார் சமிந்த விஜயசிறி எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை இன்று (23) காலை, கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம், பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர் கையளித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த சமிந்த விஜயசிறி, 2023ஆம் ஆண்டு தமது எம்.பி பதவியையும் இராஜினாமா செய்திருந்ததுடன், மீண்டும் 2024ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment