முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது - News View

About Us

About Us

Breaking

Friday, May 23, 2025

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக, அநுராதபுர மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இதுவரை 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment