இலங்கையில் சிறார்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்துவரும் மந்தபோசணை : சுட்டிக்காட்டியுள்ள உலக உணவுத் திட்டம் - News View

About Us

Add+Banner

Wednesday, April 9, 2025

demo-image

இலங்கையில் சிறார்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்துவரும் மந்தபோசணை : சுட்டிக்காட்டியுள்ள உலக உணவுத் திட்டம்

wfp-world-food-programme-logo-png_seeklogo-208231
(நா.தனுஜா)

இலங்கையில் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களில் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இது கரிசனைக்குரிய அளவில் மந்தபோசணை அதிகரித்து வருவதையும், போதியளவு போசணையைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் இடைவெளியையும் காண்பிப்பதாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களில் ஒன்றான உலக உணவுத் திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் நிலைவரம் தொடர்பான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் போசணை மட்டம் தொடர்பில் அவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு :

பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்ந்த போதிலும், கடந்த ஆண்டு இலங்கை ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை நோக்கிய பாதையில் பயணித்தது. குறிப்பாக கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியான மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, 2024 இன் முதலாம் காலாண்டில் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்பட்ட போதிலும், வறுமை, மக்களின் நலிவுற்றதன்மை, உணவுப் பாதுகாப்பின்மை போன்ற நிலைமைகள் தொடர்ந்தன. நாட்டின் மொத்த சனத் தொகையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 31 சதவீதமாகப் பதிவானது.

உலக வங்கியின் எதிர்வுகூறலின்படி அடுத்துவரும் சில ஆண்டுகளுக்கு நாட்டின் வறுமை மட்டம் 25 சதவீதத்துக்கும் மேல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களில் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இன்மை என்பன உள்ளடங்கலாக மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எமது 4 வகையான செயற்திட்டங்கள் ஊடாக நாம் 1.5 மில்லியன் பேருக்கு அவசியமான உதவிகளை வழங்கியிருந்ததுடன், அவர்களில் 61 சதவீதமானோர் பெண்களாவர். அதன்படி உடனடி உணவு விநியோகத்திட்டத்தின் ஊடாக 3900 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அத்தோடு 260,000 டொலருக்கு மேற்பட்ட நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இருப்பினும் இலங்கையின் போசணை மட்டமானது, கரிசனைக்குரிய அளவில் மந்தபோசணை அதிகரித்து வருவதையும், போதியளவு போசணையைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் இடைவெளியையும் காண்பிக்கிறது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய பாடசாலைகளுக்கான உணவு வழங்கல் திட்டம் மற்றும் திரிபோஷா வழங்கல் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அவசியமான எமது ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதன் ஊடாக இந்நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *