முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (08) இரவு கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
2006 ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றையதினம் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment