புதிய சட்ட வரைபை தயாரித்து பூரணப்படுத்தியிருந்தோம் : நிறைவேற்ற வலியுறுத்துகிறார் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Thursday, April 24, 2025

புதிய சட்ட வரைபை தயாரித்து பூரணப்படுத்தியிருந்தோம் : நிறைவேற்ற வலியுறுத்துகிறார் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி

முஸ்லிம் விவாக, விவ­கா­ரத்­துச்­ சட்டம் குறித்த கருத்­தா­டல்­களை அடுத்து நாம் புதிய சட்ட வரைபைத் தயா­ரித்துப் பூரணப்படுத்தியிருந்­த­துடன் அதற்கு சட்­டமா அதிபர் ஒப்­புதல் அளித்தி­ருந்தார். தற்­போது அதனை வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யிட்டு, சட்­ட­மாக நிறை­வேற்­று­வதை மாத்­தி­ரமே செய்ய வேண்டி­யி­ருக்­கி­றது என முன்னாள் நீதி­ய­மைச்­சரும், வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­மான அலி சப்ரி தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் விவாக, விவ­கா­ரத்­துச்­ சட்­டத்தின் ஆதிக்­கத்­துக்கு உட்பட்டதொரு விட­ய­தானம் பற்­றிய செய்­தியை மேற்­கோள்­காட்டி தனது உத்­தி­யோ­க­பூர்வ பேஸ்புக் பக்­கத்தில் செய்­தி­ருக்கும் பதிவிலேயே அலி சப்ரி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

அப்­ப­திவில் அவர் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது, முஸ்லிம் விவாக, விவகா­ரத்­துச் ­சட்டம் குறித்த கருத்­தா­டல்­களை அடுத்து நாம் புதிய சட்ட வரைபைத் தயா­ரித்துப் பூர­ணப்­ப­டுத்­தி­யி­ருந்­த­துடன் அதற்கு சட்­டமா அதிபர் ஒப்­புதல் அளித்­தி­ருந்தார். தற்­போது அதனை வர்த்தமானி அறி­வித்­தலில் வெளி­யிட்டு, சட்­ட­மாக நிறை­வேற்­று­வதை மாத்­தி­ரமே செய்­ய­ வேண்­டி­யி­ருக்­கி­றது.

இருப்­பினும் அதற்கு இலங்­கை­யி­லுள்ள ஆணா­திக்­கப்­போக்­கு­டைய முஸ்லிம் சிவில் சமூ­கமும், இஸ்­லா­மிய மத அமைப்­புக்­களும் ஆதரவளிக்கும் வரை காத்­தி­ருந்தால், எனது கடந்­த­ கால அனுபவத்துக்கு அமைய, ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தொரு சட்டம் வராமலேயே போய்­விடும்.

நாம் தயா­ரித்த வரைபு முஸ்லிம் சமூ­கத்­தைச்­ சேர்ந்த பெண் உரிமைகள் செயற்­பாட்­டா­ளர்­களின் எதிர்­பார்ப்­புக்­களை முற்­றிலும் பூர்த்­தி­செய்­யாத வகை­யிலோ அல்­லது மிக­நேர்த்­தி­யா­ன­தா­கவோ இல்­லாமல் இருக்­கக்­கூடும்.

இருப்­பினும் அச்­சட்ட வரைபில் பெண் காதி, காதிக்­கான குறைந்தபட்ச தகைமை, திரு­ம­ணத்­துக்­கான குறைந்­த­பட்ச வயதெல்லையாக 18 வயது, பலதாரமணம் தொடர்பான மட்டுப்பாடுகள், நீதிவான் நீதிமன்றத்தின்வசம் நிர்வாக அதிகாரம் உள்ளிட்ட பல முற்போக்கான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment