டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்திகம் (22) இரவு வெல்லம்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டேன் பிரியசாத் கொல்லப்பட்டார்.
வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இரவு 9.10 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் கைத்துப்பாக்கியால் சூடு நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறந்தவரின் சகோதரரான திலிண பிரசாத் பல வருடங்களுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக தந்தை ஒருவரும் அவரது மகன் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் திலிண பிரசாத்திற்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருடம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன பட்டியல் வேட்பாளரான டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிசார் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த தந்தையும் அவரது மகனும் கைது செய்யப்பட்டதோடு, பெண் ஒருவரும் பின்னர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண் டேன் பிரியசாத்தின் மனைவியின் சகோதரி என தெரிவிக்கப்படுகின்றது. டேன் பிரியசாத் நேற்றுமுன்தினம் (22) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment