உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பள்ளிவாசல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய நம்பிக்கையாளர் தெரிவினை தேர்தல் முடியும்வரை இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 காரணமாக அனைத்து பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் சாவியாக்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய நம்பிக்கையாளர் தெரிவினை தேர்தல் முடியும்வரை இடைநிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நம்பிக்கையாளர்களின் பதவிக்காலம் முடிவுற்றிருப்பின் புதிய தெரிவு நடைபெறும்வரை தற்போதைய நம்பிக்கையாளர்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக செயற்படுமாறு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுற்றவுடன் நம்பிக்கையாளர் பதவிக்காலம் முடிவுற்றுள்ள சகல பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் சாவியாக்களிலும் நம்பிக்கையாளர் தெரிவை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள், வக்பு சபையின் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் திணைக்களத்தின் சகல கள உத்தியோகத்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Vidivelli
No comments:
Post a Comment