பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 24, 2025

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று எதிர்வரும் 07 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள சில பாடசாலைகள் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து தேர்தல் நடவடிக்கைளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளின் விடுமுறைகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு

No comments:

Post a Comment