ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நேற்று முதல் யாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என்றும் எக்காரணம் கொண்டும் ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு புதிய பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தலதா மாளிகை யாத்திரைக் குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தங்கள் சடங்குகளைச் செய்ய ஒரு வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சுமார் 400,000 பக்தர்கள் தற்போது வரிசையிலுள்ளார்களென பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
27ஆம் திகதியளவில்தான் தற்போது வரிசையில் இருக்கும் மக்கள் தங்களுடைய வழிபாடுகளை நிறைவு செய்வார்களென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால், நாளை (26) பிற்பகல் அல்லது 27ஆம் திகதி காலை அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை இன்று (25) 8ஆவது நாளாக காலை 11.00 மணிக்கு தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment