எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி சனிக்கிழமை, தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார விடுத்துள்ள அறிவித்தலில், நித்திய இளைப்பாறுதலடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 26ஆம் திகதி, இலங்கையிலும் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஏப்ரல் 26ஆம் திகதி அரச நிறுவனங்களில், தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக் கிரியை ஏப்ரல் 26, சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி மு.ப. 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு) வத்திக்கானின் புனித பேதுரு பசிலிக்கா சதுக்கத்தில் (St. Peter’s Square) இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment