உப்பு இன்று முதல் சந்தைக்கு விநியோகம் ! விலையும் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 6, 2025

உப்பு இன்று முதல் சந்தைக்கு விநியோகம் ! விலையும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகை இன்று (06) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சந்தையில் உப்பு விலையும் ஓரளவு அதிகரிக்கும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தன திலக தெரிவித்தார்.

நாட்டில் உப்பு உற்பத்தி குறைந்ததால், அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்ததுடன், அதன்படி, இந்தியாவில் இருந்து உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது.

அதேவேளை ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் இன்று (6) முதல் உப்பு விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, பொதியிடப்பட்ட 400 கிராம் உப்பு தூளின் விலை ரூ. 100 இலிருந்து 120 ஆகவும், பொதியிடப்பட்ட 1 கிலோ உப்பு கட்டியின் விலை ரூ. 120 இலிருந்து ரூ. 180 ஆகவும் அதிகரிக்கப்படும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தன திலக தெரிவித்துள்ளார்.

உப்பு விலை அதிகரிப்பானது தற்காலிக தீர்மானம் என்று தெரிவித்த, அவர் மார்ச் மாதம் ஹம்பாந்தோட்டை உப்பளத்தில் உப்பு உற்பத்தி கிடைத்தவுடன் உப்பு விலை குறைக்கப்படும் என்றும், இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதனாலேயே உப்பின் விற்பனை விலை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment