இதுவரை இருந்த அரசுகளுக்கு கொள்கை இல்லாமையே தேங்காய் பற்றாக்குறைக்கு காரணம் - பிரதமர் ஹரிணி - News View

About Us

About Us

Breaking

Thursday, February 6, 2025

இதுவரை இருந்த அரசுகளுக்கு கொள்கை இல்லாமையே தேங்காய் பற்றாக்குறைக்கு காரணம் - பிரதமர் ஹரிணி

தெங்குப் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கத்திற்கும் எத்தகையதொரு கொள்கையும் இல்லாமை காரணமாக தேங்காய்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போதைய அரசாங்கம் தெங்குப் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்காக பொருத்தமான கொள்கைத் திட்டங்களைத் தயாரிப்பதாகவும், அதுவரை சில குறுகியகால செயற்றிட்டங்களைப் பின்பற்றி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அவ்வாறே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தெங்குப் பயிர்ச் செய்கையை விருத்தி செய்வதற்காக, அதிகளவான நிதியை ஒதுக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் தேங்காய்களுக்கான பற்றாக்குறை ஏற்படாதிருக்க, சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழுள்ள, தெங்குப் பயிர்ச் செய்கையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஊடாக, அதிகளவான தேங்காய் விளைச்சல்களைப் பெறுவதற்கான ஆராய்ச்சிகள், உள்நாட்டு தேங்காய் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான பயிர்ச் செய்கை முறைகள், அதிக விளைச்சலைத் தரக்கூடிய தென்னை இனங்களை அறிமுகப்படுத்துதல், தெங்குப் பயிர்ச் செய்கையில் ஏற்படும் நோய்கள், அவற்றைத் தடுப்பதற்கான பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துவதற்கான தொழிநுட்ப ஆலோசனைகள் மற்றும் சிபாரிசுகளை வழங்குதல், தெங்குப் பயிர்ச் செய்கை தொடர்பான கொள்கைத்திட்டங்களைச் சமர்ப்பித்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment