பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட ‘உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேடு ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டதா என்பது குறித்த தனது முடிவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சபாநாயகருக்கு விரைவாக அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று (27) அறிவித்துள்ளது.
குறித்த திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, அதன் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரண் என அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களின் விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மனுக்களின் விசாரணையின் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த மனுக்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர், தேசிய ஜனநாயக முன்னணியின் சட்டத்தரணி கௌஷல்யா ஜயவீர, கல்கிஸ்ஸை மாநகர சபையின் முன்னாள் மேயர் உபுல் கமகே, கடுவெல நகர சபை உறுப்பினர் ஷிரந்த பெரேரா ஆகியோர் தாக்கல் செய்தனர்.
நெல்கா மெதகெதர
No comments:
Post a Comment