பெரிய வெங்காயத்தின் மீதான விசேட பண்ட வரி குறைப்பு - News View

About Us

Add+Banner

Sunday, December 1, 2024

demo-image

பெரிய வெங்காயத்தின் மீதான விசேட பண்ட வரி குறைப்பு

24-674c09ee5dcbb%20(Custom)
நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பெரிய வெங்காயத்தின் விலையில் கவனம் செலுத்தி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் பண்டவரியானது, 30 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உள்ளூர் விவசாயிகளின் நலனுக்காகவும், நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்யவும் குறுகிய கால நடவடிக்கையாக இதனை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வரி குறைப்பானது, இன்று (01) முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்காலத்தில் எடுக்கப்படும் விஞ்ஞாபன முடிவுகளின் அடிப்படையில் தகுந்த சட்ட விதிகளின் கீழ் இதனை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *