கடமைகளை பொறுப்பேற்றார் ICC யின் புதிய தலைவர் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 1, 2024

கடமைகளை பொறுப்பேற்றார் ICC யின் புதிய தலைவர்

BCCI செயலாளராக பதவி வகித்து வந்த ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இன்று (01) முதல் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

BCCI பொதுச் செயலாளரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவராக ஓகஸ்டில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெய் ஷா 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் BCCI செயலாளராகவும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினார்.

35 வயதிலேயே இந்தப் பதவியை எட்டிய இளம் கிரிக்கெட் நிர்வாகி இவர் என்பதுடன், 57 வயதுக்கு உட்பட்ட ஒருவர் ICC இன் தலைமைப் பதவியை பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.

No comments:

Post a Comment