கபில சந்திரசேன, உதயங்க வீரதுங்க ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

கபில சந்திரசேன, உதயங்க வீரதுங்க ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இவர்களுக்கு எதிரான நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் கீழ், ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, எயார்பஸ் விமானங்களை சந்தை பெறுமதியை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் ஊழல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் 7031(c) சரத்தின் கீழ், இவர்கள் இருவரின் பெயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இரு தரப்பின் பெயர்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment