O/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதிநாள் இன்று - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதிநாள் இன்று

G.C.E (O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று (10) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கடந்த நவம்பர் 5ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இது தொடர்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் விளக்கமளித்துள்ளதாவது, எந்த காரணத்திற்காகவும் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் விண்ணப்பப் படிவங்களைப் பெற வாய்ப்பில்லை என்பதால், பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இன்றைய தினத்திற்குள் விண்ணப்பப் படிவங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பரீட்சைக்கு நீங்கள் நள்ளிரவு 12.00 மணிக்கு முன் உங்கள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment