ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் மஹேஷி சூரசிங்க விஜேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க, சந்தேகநபரை ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள 2 சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், சந்தேகநபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்குள் நுழைவதற்கும், வெளிநாடு பயணிப்பதற்கும் தடை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.
மூன்றாம் தரப்பினூடாக மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கடந்த 17ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விடுத்த பிணைக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் சந்தேகநபரை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment