இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 5, 2024

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி

T20 மற்றும் ODI தொடரில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி நேற்று (04) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் 12 பேர் கொண்ட குழு சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SK-468 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஒரு மாத இடைவெளியின் பின்னர் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வெள்ளைபந்து தொடரில் ஆடுவதற்காக அடுத்த மாதம் இலங்கை வருகிறது. 

முதலில் T20 போட்டிகளுடன் தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், குறித்த இரண்டு போட்டிகளும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 9 மற்றும் நவம்பர் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி 13ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், அடுத்த இரண்டு போட்டிகளும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 17 மற்றும் 19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment