தேர்தல் காரணமாக பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு : வாடகைக்கு வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 12, 2024

தேர்தல் காரணமாக பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு : வாடகைக்கு வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை

நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ்கள் நிறுவனங்கள் பல பஸ்களிலும், இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும் விரைவுப் பஸ்களிலும் ஆசனங்கள் முன்பதிவு செய்யப்படுவதாகக் கூறுகின்றன.

நாளை 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் அனைத்து ஆசனங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு வரும் பஸ்களில் தொண்ணூறு வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். .

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் பயணிக்கக் கூடிய பஸ்களில் மேற்படி நான்கு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 23ஆம் திகதி வரை சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், 20, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு அரச பஸ்களை வாடகைக்கு வழங்க வேண்டாம் என இலங்கை போக்குவரத்துச் சபைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment