கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை ஜனாதிபதி தேர்தலின் அச்சிடும் செலவுகள் மும்மடங்கினால் அதிகரிக்கக்கூடும் என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
மூலப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்தமை மற்றும் அச்சிடப்பட வேண்டிய வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளமை ஆகியன இதற்கான காரணமாகும் என அரச அச்சகர் கங்கா கல்பனீ லியனகே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும்போது வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதுடன் தொடர்புடைய ஏனைய செலவுகளும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
அதற்கமைய, இம்முறை ஜனாதிபதி தேர்தலின் அச்சிடும் நடவடிக்கைகளுக்காக 800 மில்லியன் ரூபா செலவாகுமென எதிர்பார்க்கப்படுவதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்காக அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டு 27 அங்குலம் நீளம் கொண்டதாக காணப்பட்டது.
இம்முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின், வாக்குச்சீட்டின் நீளமும் அதிகரிப்பதுடன் செலவுகளிலும் அதிகரிப்பை ஏற்படுத்துமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment