எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீடக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான தாருசலாமில் நடைபெற்றது.
No comments:
Post a Comment