ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளானால் முறைப்பாடளிக்கலாம் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 3, 2024

ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளானால் முறைப்பாடளிக்கலாம்

பெண்களிடம் இருந்து ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளானால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச் செயல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஆண், பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி ஒரு ஆணோ அல்லது ஆண் சிறுவனோ ஏதேனும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானால், அவர் தயக்கமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம்.

சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும்போது, பொலிஸ் நிலையங்களில் வயது முதிர்ந்த பெண்களால் ஆண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment