தினமும் கட்டாயம் சிரிக்க வேண்டும் : புதிய சட்டம் அமுல் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 18, 2024

தினமும் கட்டாயம் சிரிக்க வேண்டும் : புதிய சட்டம் அமுல்

மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சிரிப்புக்கான புதிய சட்டம் ஒன்றை ஜப்பானிய மாகாணம் ஒன்று கொண்டுவந்துள்ளது.

ஜப்பானின் யமகடா (Yamagata) மாகாணம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது. இதன்படி, மக்கள் தினசரி சிரிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது.

யமகடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு எப்படி உதவும் என்பதைக் காட்டுகிறது.

ஜப்பானின் இந்தச் சிரிப்புச் சட்டம் தனி மனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

மேலும், இதயப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலரால் மருத்துவக் காரணங்களால் சிரிக்க முடியாமல் போகலாம். அவ்வாறான சூழலில் இச்சட்டம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இச்சட்டத்தை அமல்படுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்ட இந்த உத்தரவு, “சிரிப்பின் நன்மைகளை மக்கள் புரிந்துகொள்ள ஊக்குவிப்பதும், ஒவ்வொரு நாளும் ஒரு முறை சிரிப்பது போன்ற வழிகளில் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும்” ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேலை செய்யும் இடங்களிலும் சிரிப்பு நிறைந்த சூழலை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாளை “சிரிப்பு தினமாக” கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இருப்பினும், இந்த உத்தரவு தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என்று சில அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.

நோய் அல்லது வேறு காரணங்களால் சிரிக்க முடியாதவர்களின் உரிமைகளை இந்த உத்தரவு மீறுவதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

“சிரிப்பதா வேண்டாமா என்பது அரசியல் சாசனத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை” என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் Toru Seki தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment