ஞானசார தேரருக்கு பிணை ! மறுசீரமைப்பு மனுவை ஆராய்ந்த பின்னர் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 18, 2024

ஞானசார தேரருக்கு பிணை ! மறுசீரமைப்பு மனுவை ஆராய்ந்த பின்னர் உத்தரவு

4 வருட கடூழிய கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசார தேரர் சமர்ப்பித்த மறுசீரமைப்பு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

ஞானசார தேரரை 50,000 ரூபா பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியிலான 2 சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2016 மார்ச் 30ஆம் திகதி கூரகல விகாரை தொடர்பில், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, ஞானசார தேரருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என நிரூபணமானதைத் தொடர்ந்து மார்ச் (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யபட்டபெந்தி, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்தார்.

அத்தோடு ஏப்ரல் 03ஆம் திகதி ஞானசார தேரருக்கு, பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment