பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா சான்றுரைப்படுத்தியுள்ளதாக, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றிற்கு அறிவித்தார்.
அதற்கமைய, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 ஜூலை 17 ஆம் திகதி “இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தம்)” எனும் சட்டமூலத்திலும், 2024 ஜூலை 19 ஆம் திகதி “ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்திலும் சபாநாயகரின் சான்றுரை எழுதப்பட்டதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய குறித்த சட்டமூலங்கள் சட்டங்களாக அமுலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment