பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2024

பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 2 சரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள வருடங்களின் எண்ணிக்கையை திருத்தியமைப்பதற்காக அரசியலமைப்பு திருத்த சட்டமூலமொன்றை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த யோசனை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (09) முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 30 (2) சரத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 62 (2) சரத்திற்கமைய, பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 5 வருடங்களாகும்.

எனினும் அரசியலமைப்பின் 83 (b) சரத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 6 வருடங்களை விட அதிகமாக நீடிக்கப்படுமாயின், அதற்காக முன்வைக்கப்படும் சட்டமூலத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை 6 வருடங்களுக்கு மேல் நீடிப்பதற்காக முன்மொழியப்படும் பிரேரணைக்கு, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என அரசியலமைப்பின் 83-ஆ பிரிவு கூறுகின்றது.

இந்த 2 சரத்துகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள பதவிக் காலத்தை 5 வருடங்களாக மாற்றுவதற்கு, உரிய சட்டமூலத்தை முன்வைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment