“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2001 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குவது குறித்து ஒரே நிலைப்பாட்டுடன் செயற்பட்டார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கான நிறைவேற்று அதிகாரங்களைப் பெற்ற முதல் சந்தர்ப்பத்திலேயே, மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உரிமைப்பத்திரங்கள் வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற, இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் பூரண உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகளை வழங்கும் “ரன்தொர உறுமய” வீட்டு உரிமை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் 31 அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைந்துள்ள 130 வீடுகளுக்கான உரிமைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதன்போது அடையாளமாக ஜனாதிபதி சிலருக்கு வீட்டு உரிமைகளை கையளித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின்படி, 2024 வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் முழு உரிமையை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபா அல்லது அதற்கும் குறைவான வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட அனைத்து வீடுகளுக்காகவும் 150,000 ரூபாவினை செலுத்தி முடித்திருப்போர் மற்றும் இதுவரையில் அந்த தொகையினை செலுத்தாமல் இருந்து ஒரு மாதத்திற்குள் அந்தத் தொகையை செலுத்தி முடிப்போர் உள்ளடங்களாக 50,000 பயனாளி குடும்பங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் முழுமையான வீட்டு உரிமை வழங்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 1070 பயனாளிகளுக்கு உரிமைப்பத்திரங்களை வழங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
மேலும் உரையாற்றிய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இது தொடர்பான சட்டங்கள் மற்றும் அமைச்சுப் பத்திரங்களைத் தயாரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. எனவே, இன்று மக்களுக்கு காணி உரிமை மற்றும் வீட்டு உரிமை வழங்குதல் ஆகிய இரண்டு வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக செயற்படுத்த முடிந்துள்ளது.
இதன்போது, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் நன்றிக்கு உரியவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டார். இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் உறுமய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ் சத்யானந்த, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாரச்சி உள்ளிட்டோர் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment