டிலான் பெரேரா எம்.பி பயணித்த கார் விபத்து ! ஒருவர் காயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 13, 2024

டிலான் பெரேரா எம்.பி பயணித்த கார் விபத்து ! ஒருவர் காயம்

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியின் 82/1 கிலோ மீற்றர் மைல்கல் அருகில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (13) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அதேவேளை, காரில் பயணித்த மற்றுமொரு நபர் காயமடைந்துள்ளார்.

டிலான் பெரேரா மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கடும் மழை காரணமாக வீதியில் பயணித்த கார் திடீரென சறுக்கிச்சென்று, அருகில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment