அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரத்தமானி வெளியீடு : ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய பிரசுரிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, July 19, 2024

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரத்தமானி வெளியீடு : ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய பிரசுரிப்பு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் குறித்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளதாக, அவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ‘6 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ‘5 ஆண்டுகளுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வரை, குறித்த திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட வேண்டாம் என நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நீதியமைச்சின் செயலாளருக்கு நேற்று (18) அறிவித்திருந்தார். 

இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திருத்தத்தை மேற்கொள்வதற்கான அனுமதி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய (18) திகதியிடப்பட்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment