நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5 வீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (15) தீர்மானித்தது.
இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த யோசனையை ஆராயப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வீட்டுப்பாவனை, மத ஸ்தலங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், பொது சேவைகள் மற்றும் அரச நிறுவனங்கள் என்ற அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கான மின் கட்டணங்கள் நாளை (16) முதல் குறையவுள்ளன.
மின் கட்டண குறைப்பை 10 வீதத்திற்கு மட்டுப்படுத்துவது தொடர்பில் மின்சார சபை யோசனை முன்வைத்திருந்தது. எனினும் ஆணைக்குழுவினால் மொத்த மின் கட்டண குறைப்பு 22.5 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத ஸ்தலங்களில் குறைந்த மின் பாவனை பிரிவுக்கென இதுவரைக் காலமும் அறவிடப்பட்ட ஒரு மின் அலகிற்கு அறவிடப்பட்ட 8 முதல் 9 ரூபா வரை கட்டண அறவீடு 6 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment