இலங்கை உட்பட 93 நாடுகளுக்கு வீசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, July 15, 2024

இலங்கை உட்பட 93 நாடுகளுக்கு வீசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல அனுமதி

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வீசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு வீசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு வீசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வீசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும்.

தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment