ஏமாற வேண்டாம் ! மேலும் 8 நிறுவனங்களின் பட்டியல் வெளியானது ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 23, 2024

ஏமாற வேண்டாம் ! மேலும் 8 நிறுவனங்களின் பட்டியல் வெளியானது !



இலங்கையில் தடை செய்யப்பட்ட ‘பிரமிட் ‘ திட்டங்களை நடத்தும் மேலும் 08 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இப்பிரமிட் திட்டங்களை நம்பி ஏமாற வேண்டாமெனவும் பொதுமக்களை மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. 

மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மிகவும் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் நடந்துகொள்ளுமாறும், மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மத்திய வங்கி வெளியிட்ட பெயர்ப்பட்டியலுக்கு மேலதிகமாக மேலும் 08 நிறுவனங்களின் செயலிகளின் பெயர்களையும் மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

Beecoin App/Sunbird Foundation
Fast Win (Pvt)Ltd
Fruugo Online App/Fruugo Online (Pvt) Ltd
Genesis Business School/Era Miracle (Pvt) Ltd
Isimage International (Pvt) Ltd
Ledger Block
Qnet/Quesnet
Ride to Three Freedom (Pvt) Ltd.

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரம்பிக்கும், வழங்குகின்ற, விளம்பரப்படுத்துகின்ற, நடத்துகின்ற, நிர்வகிக்கின்ற எந்தவொரு நபராயினும் அவர் தண்டனைக்குரிய குற்றத்தை செய்வதாக, கருதப்படுவாரென்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சில பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள், இலங்கை மத்திய வங்கியுடன் சில உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் சில தரப்பினரின் கூற்றுகளை நிராகரிப்பதாகவும், இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியது.

இவ்வாறான பிரமிட் திட்டங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் 83 (இ) பிரிவின்‌ ஏற்பாடுகளின்‌ நியதிகளுக்கமைய, சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ள சட்ட மாஅதிபரை கோரியுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்தது.

No comments:

Post a Comment