மார்ச்சில் பணவீக்கம் 2.5 சதவீதமாக வீழ்ச்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 23, 2024

மார்ச்சில் பணவீக்கம் 2.5 சதவீதமாக வீழ்ச்சி

(நா.தனுஜா)

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த பெப்ரவரி மாதம் 5.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது கடந்த மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக கணிசமான அளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி பெப்ரவரியில் 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்த உணவுப் பணவீக்கம் மார்ச் மாதத்திலும் அதே மட்டத்தில் பேணப்பட்டிருக்கும் அதேவேளை, பெப்ரவரி மாதம் 5.1 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப் பணவீக்கம் மார்ச்சில் 0.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இக்காலப்பகுதியில் ஆடை, காலணி, தளபாடம், குடித்தன உபகரணங்கள் போன்ற உணவல்லாப் பொருட்களின் விலைகளும், நீர், மின்சாரம், எரிவாயு, உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றுக்கான கட்டணங்களும் பெருமளவினால் குறைவடைந்துள்ளன.

அதேபோன்று தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணின் பிரகாரம், பொருளாதாரத்தில் தளம்பல் அடையும் விலைகள், கட்டணங்களைக் கொண்ட உணவு, சக்திவலு மற்றும் போக்குவரத்து போன்றவை தவிர்ந்த ஏனையவற்றுக்கான மையப்பணவீக்கமானது கடந்த மார்ச் மாதம் 3.4 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின்படி கடந்த பெப்ரவரி மாதம் 5.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், மார்ச் மாதம் 0.9 சதவீதமாக பெருமளவால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment