அலவி மௌலானா சனசமூக நிலையம் : நீதிமன்றம் தடை உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 28, 2024

அலவி மௌலானா சனசமூக நிலையம் : நீதிமன்றம் தடை உத்தரவு

மரு­தானை, சுது­வெல்ல ஆனந்த ராஜ­க­ருணா மாவத்­தையில் அமைந்துள்ள கொழும்பு மாந­கர சபைக்குச் சொந்­த­மான அலவி மெள­லானா சன­ச­மூக நிலை­யத்தை தனியார் ஒருவர் பலாத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்­திக்­ கொள்ளும் முயற்­சிக்கு மேன்­மு­றை­யீட்டு நீதிமன்றம் உடன் அமு­லுக்கு வரும் வகையில் தடை­யுத்­த­ரவு பிறப்பித்­துள்­ளது.

முன்னாள் கொழும்பு மாந­க­ர ­சபை உறுப்­பி­ன­ரான கித்­சிரி ராஜபக்ஷவுக்கு எதி­ரா­கவே இத்­த­டை­யுத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் மாந­க­ர­ சபை உறுப்­பி­ன­ரான அஜித் ஸ்ரீ பெரே­ரா­வினால், முன்னாள் கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர் கித்­சிரி ராஜபக்ஷவுக்கு எதி­ராக இந்த ரிட்­மனு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

நேற்றுமுன்­தினம் (26) ரிட்­மனு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட­போது முறைப்­பாட்­டாளர் சார்பில் மன்றில் ஆஜராகியி­ருந்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைசர் முஸ்­தபா முன்வைத்த கார­ணங்­களை கவ­னத்திற் கொண்டே மேன்முறையீட்டு நீதி­மன்ற நீதி­பதி டி.என்.சம­ரகோன் இந்த தடை­யுத்­த­ர­வினை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை உத்­த­ர­விட்டு தீர்ப்பு வழங்­கினார்.

குறிப்­பிட்ட அலவி மெள­லானா சன­ச­மூக நிலை­யத்தை அப்பிரதேசத்தில் வதியும் பெரும்­பான்­மை­யான குறைந்த வரு­மானம் பெறுவோர் தங்­க­ளது திரு­மண வைப­வங்கள் உட்­பட நிகழ்வுகளுக்குப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். இந்த சன­ச­மூக நிலையத்தை மறைத்து பாரிய அளவில் மதிலொன்றினை நிர்மாணித்து பிர­தி­வா­தி­யான முன்னாள் மாந­கர சபை உறுப்­பினர் பலாத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்திக் கொள்ளும் முயற்­சியில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் பிர­தேச மக்கள் பல்­லேறு பாதிப்­பு­க­ளுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இந்த சட்­ட­வி­ரோத நிர்­மா­ணத்தை தடை செய்­யு­மாறு ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைசர் முஸ்­தபா மன்றில் வாதிட்டாார்.

ரிட்மனுவில் பிரதிவாதிகளாக கொழும்பு மாநகர சபை, மாநகர சபையின் ஆணையாளர், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிரி ராஜபக்ஷ ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

Vidivelli

No comments:

Post a Comment