ரமழானில் உம்ரா யாத்திரையில் எட்டு மில்லியன் பேர் பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 28, 2024

ரமழானில் உம்ரா யாத்திரையில் எட்டு மில்லியன் பேர் பங்கேற்பு

சவூதி அரே­பிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்­ச­கத்தின் சமீ­பத்­திய புள்ளிவி­வ­ரங்­க­ளின்­படி, இந்த ரம­ழானில் இது­வரை எட்டு மில்­லியன் பேர் உம்ரா யாத்­தி­ரையில் பங்­கேற்­றுள்­ளனர்.

ரமழான் தொடங்­கி­யதில் இருந்து நேற்றுமுன்­தினம் (26) வரை 8,235,680 உம்ரா யாத்­தி­ரி­கர்கள் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­துள்­ளனர்.

இவர்­களில், 7,259,504 பேர் தங்கள் உம்­ராவை முடித்­துள்­ள­துடன் சுமார் 976,176 பேர் தற்­போது சவூ­தியில் தங்­கி­யுள்­ளனர்.

இவர்­களில் 980,556 பேர் தரை­வ­ழி­யா­கவும் 700,983 பேர் விமா­னங்கள் மூலமும் சவூ­தியை வந்­த­டைந்­துள்­ள­துடன் மேலும் 54,141 பேர் கடல் மார்க்­க­மாக வருகை தந்­துள்­ளனர்.

இக்காலப்­ப­கு­தியில் இள­வ­ரசர் முகம்­மது பின் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையம் 1,919,971 வரு­கை­க­ளையும் 1,437,849 புறப்பாடு­க­ளையும் பதிவு செய்­துள்­ளது. 

சரா­ச­ரி­யாக தின­சரி 6,579 பேர் வருகை தந்­துள்­ளதுடன் 5,613 உம்ரா யாத்­தி­ரி­கர்கள் புறப்­பட்டுச் சென்­றுள்­ளனர்.

இதே­வேளை ரம­ழானின் இறுதிப் பத்து தினங்­களில் உம்ரா யாத்திரையில் ஈடு­ப­டவும் இஃதிகாப் அமலில் ஈடு­ப­டவும் பெருந்திரளானோர் சவூதி அரே­பி­யா­வுக்கு வருகை தர­வுள்­ளனர். 

இதன் கார­ண­மாக சன நெரி­சலைக் கட்­டுப்­ப­டுத்­தவும் சக­ல­ருக்கும் வாய்ப்­பு­களை வழங்கும் நோக்­கிலும் ரம­ழானில் ஒருவர் ஒரு தடவை மாத்திரமே உம்ரா கடமையில் ஈடுபட முடியும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment