நாகானந்த கொடிதுவக்குவின் சட்டத்தரணி தகுதியை நீக்கிய உயர் நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 29, 2024

நாகானந்த கொடிதுவக்குவின் சட்டத்தரணி தகுதியை நீக்கிய உயர் நீதிமன்றம்

நாகானந்த கொடிதுவக்குவின் சட்டத்தரணி பதவியை தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பிரீத்தி பத்மன் சூரசேன, எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதற்கமைய நாகானந்த கொடித்துவக்கு சட்ட தொழிலில் ஈடுபடுவதற்கு வாழ்நாள் தடை விதித்து உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

சில நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதால், தாம் தாக்கல் செய்த வழக்குகளை அவர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ள வேண்டாமென, நாகானந்த கொடித்துவக்கு, கடந்த 2014 ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசி மூலம் வேண்டுகோளொன்றை விடுத்திருந்தார்.

அந்தச் செயலின் மூலம் அவர் சட்டத்தரணி தொழிலுக்கு ஒழுக்கக்கேடான குற்றத்தைச் செய்ததாக நீதிபதிகள் குழாம் இன்று (29) தமது தீர்ப்பில் அறிவித்தது.

அதற்கமைய, நாகாநந்த கொடித்துவக்குவின் சட்டத்தரணி எனும் நிலையை இரத்து செய்வதாக அறிவித்த உயர் நீதிமன்ற குழாம், இது தொடர்பில் உடனடியாக உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

பொது நல வழக்குகளை தாக்கல் செய்து நடாத்தி வந்த நாகானந்த கொடிதுவக்கு, 2019 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

No comments:

Post a Comment