மன்னாரில் கடற்படை, அதிரடிப்படை கூட்டு நடவடிக்கை : 53,000 போதை மாத்திரை வில்லைகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 29, 2024

மன்னாரில் கடற்படை, அதிரடிப்படை கூட்டு நடவடிக்கை : 53,000 போதை மாத்திரை வில்லைகள் மீட்பு

இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது, நேற்று (28) மன்னார் இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53,000 Pregabalin போதை மாத்திரை வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சட்ட விரோதமான பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுக்கும் நோக்கில் கரையோர மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வழமையான நடவடிக்கைகளின் போது இந்த கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS புவனேகாவினால் இலுப்பைக்கடவை தடாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) உதவியுடன் நேற்று (28) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ருகே உள்ள புதர்களில் சந்தேகத்திற்கிடமான பெட்டியை மீட்டனர். இதன்போது 53,000 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எஸ்.றொசேரியன் லெம்பேட்

No comments:

Post a Comment