கிழக்கு மாகாணத்தில் மூன்று கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 10, 2024

கிழக்கு மாகாணத்தில் மூன்று கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் தொடர் மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி மட்டக்களப்பு மத்தி, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய மூன்று கல்வி வலயங்களுக்கே குறித்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வியாழக்கிழமை (11) மற்றும் வெள்ளிக்கிழமை (12) ஆகிய தினங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, இந்த நாட்களுக்கு பதிலாக இம்மாதமே பதில் பாடசாலை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment