சுவிட்சர்லாந்து பயணமானார் ஜனாதிபதி : சுமார் இரு வாரங்களில் நாடு திரும்புவார் - News View

About Us

About Us

Breaking

Friday, January 12, 2024

சுவிட்சர்லாந்து பயணமானார் ஜனாதிபதி : சுமார் இரு வாரங்களில் நாடு திரும்புவார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணமாகியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவரது உத்தியோகபூர்வ விஜயம் 12 நாட்களைக் கொண்டதாக அமையுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார மாநாடு அல்லது மன்றம் ஆனது, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தின் கென்டனில் (Canton) உள்ள கொலோனியில் (Cologny) அமைந்துள்ள அரச தனியார் துறை ஒத்துழைப்புக்கான சர்வதேச அரச சாரா அமைப்பாகும்.

இது 1971 ஜனவரி 24 இல் ஜேர்மன் பொறியியலாளர் கிளாஸ் ஸ்வாப் என்பவரால் நிறுவப்பட்டது.

No comments:

Post a Comment