மின்சார கட்டண திருத்தம் கிடைத்துள்ளதாக PUCSL அறிவிப்பு : முன்மொழிவு தொடர்பில் விரைவில் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, January 13, 2024

மின்சார கட்டண திருத்தம் கிடைத்துள்ளதாக PUCSL அறிவிப்பு : முன்மொழிவு தொடர்பில் விரைவில் நடவடிக்கை

இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டண திருத்த முன்மொழிவு இன்று (13) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின், தொடர்பாடல் பணிப்பளார் ஜயநாத் ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

குறித்த மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அதனை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கை மின்சார சட்டம் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என, ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2024 ஜனவரி - மார்ச் காலப் பகுதிக்கான கட்டணத் திருத்தமே, ஆணைக்குழுவின் அனுமதிக்காக, இலங்கை மின்சார சபையினால் இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment