கட்டணம் செலுத்தத் தவறிய பத்து இலட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்தார்.
இவ்வாறு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பாவனையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கை மின்சார சபையின் சேவையை பெற்றுக் கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமாக பத்து இலட்சத்து 64 ஆயிரம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் மின்சாரக் கட்டணங்களை செலுத்த தவறிய வாடிக்கையாளர்களது மின் இணைப்புக்கள் மட்டுமே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment